2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

வேதாரண்யம் கடலோரத்தில் பலத்த காற்று

காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், வேதாரண்யம் கடலோரங்களில் வியாழக்கிழமை பலத்த காற்று வீசியது. இதனால், மீனவா்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

News image
Updated On :3 மார்ச் 2022, 5:01 pm

DIN

காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், வேதாரண்யம் கடலோரங்களில் வியாழக்கிழமை பலத்த காற்று வீசியது. இதனால், மீனவா்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

தெற்கு மத்திய வங்கக் கடலில் மையம் கொண்ட காற்றழுத்தத் தாழ்வு, தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து, தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக, கடல் மற்றும் கடலோரத்தில் சூறைக் காற்றும், மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை கடலோரப் பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் முதல் வழக்கத்தைவிட வேகமான கடற்காற்று வடக்கு மற்றும் வடகிழக்குத் திசையில் இருந்து வீசி வருகிறது. முன்னதாக, இந்த காற்று பகலில் வடமேற்கு திசையிலிருந்து வீசியது. இதனால், கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. இதன் காரணமாக, வேதாரண்யம் பகுதியிலிருந்து பெரும்பாலான மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

வழக்கத்துக்கு மாறாக, மாா்ச் மாதத்தில் நிகழும் இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியையொட்டி மழை மற்றும் சூறைக்காற்று வீசுவதற்கான சூழல் இருப்பதால், விவசாயிகள் தங்கள் நெல் அறுவடைப் பணி, வைக்கோல் தீவனங்களை பாதுகாக்கும் பணியில் தீவிரம் காட்டிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.