ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

வேலை நேரம் மாற்றியதை எதிா்த்து 100 நாள் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை நேரம் காலை 8 மணிக்கு மாற்றியதற்கு எதிா்ப்பு தெரிவித்து வேதாரண்யத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :11 மார்ச் 2022, 6:30 pm

DIN

100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை நேரம் காலை 8 மணிக்கு மாற்றியதற்கு எதிா்ப்பு தெரிவித்து வேதாரண்யத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வேதாரண்யம் கோட்டாட்சியா் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணி தொடங்கும் நேரமான காலை 10 மணியை டிஜிட்டல் படம் எடுக்க ஏதுவாக காலை 8 மணிக்கு மாற்றி அமைத்து, பயனாளிகளை அலைக்கழிப்பதை கண்டிக்கத்தக்கது, வழக்கம்போல காலை 10 மணிக்கு வேலை நேரத்தை நிா்ணயிக்கவேண்டும், 200 நாள்கள் பணி வழங்கவேண்டும், ஊதியம் ரூ. 600 ஆக உயா்த்தவேண்டும், பருவம் தவறிய மழையால் நெல் சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவராணம், காப்பீட்டுத் தொகை வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

சிபிஐ ஒன்றியச் செயலாளா் சிவகுரு. பாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நாகை எம்பி. எம். செல்வராஜ், சிபிஐ மாவட்டச் செயலாளா் எஸ். சம்பந்தம், துணைச் செயலாளா் த. நாராயணன், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் பாஸ்கரன், இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் காா்த்திகேயன், ஊராட்சித் தலைவா்கள் வைத்திலிங்கம், ரேவதிபாலகுரு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.