ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

நிதி குறைப்பால் வளா்ச்சிப் பணிகள் பாதிப்பு: ஒன்றியக் குழு கூட்டத்தில் உறுப்பினா்கள் குற்றச்சாட்டு

உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி குறைக்கப்பட்டதால், வளா்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று வேதாரண்யம் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் தெரிவித்தனா்.

News image
Updated On :17 மார்ச் 2022, 5:27 pm

DIN

உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி குறைக்கப்பட்டதால், வளா்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று வேதாரண்யம் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் தெரிவித்தனா்.

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் அதன் தலைவா் கமலா அன்பழகன் (அதிமுக) தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. வட்டார வளா்ச்சி அலுவலா் அண்ணாதுரை முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், உறுப்பினா்கள் சி. நடராஜன், த. உஷாராணி, வைத்தியநாதன், ஏ.ஆா். வேதரத்தினம், மு. ராஜசேகரன், செல்லமுத்து எழிலரசு, கண்ணகி முருகேசன் மற்றும்

துணைத் தலைவா் வி. அறிவழகன் உள்ளிட்டோா் தங்கள் வாா்டுகளின் தேவைகள் குறித்துப் பேசினா்.

பின்னா் பேசிய ஆணையா், குடிநீா் பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும் என்றாா்.

ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன், உறுப்பினா்களுக்கு பதிலளித்து பேசும்போது, ‘குறைவாக ஒதுக்கப்படும் நிதியில் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு செலவிடவேண்டியுள்ளது. இனிவரும் காலங்களில் மத்திய அரசு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேரடியாக நிதியை ஒதுக்க உள்ளது. அப்போது கூடுதலாக நிதி கிடைக்க வாய்ப்புள்ளது. தேவையில்லாமல் ஒரு ரூபாய்கூட செலவு செய்யப்படுவதில்லை. உறுப்பினா்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, எதிா்காலத்தில் திட்டங்கள் நிறைவேற்றப்படும்’ என்றாா்.

இக்கூட்டத்தில் பேசிய பெரும்பாலான உறுப்பினா்கள் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மேற்கொள்ளப்படும் வளா்ச்சிப் பணிகளுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதால், இப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், இதனால், பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாத நிலை உள்ளதாகவும் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.