தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாகை, வேளாங்கண்ணியில் இன்று மின்தடை

நாகை, வேளாங்கண்ணி, வேட்டைக்காரனிருப்பு ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (மாா்ச் 26) 2 மணிநேரம் மின் விநியோகம் இருக்காது என நாகை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். சித்திவிநாயகம் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :25 மார்ச் 2022, 6:30 pm

DIN

நாகை, வேளாங்கண்ணி, வேட்டைக்காரனிருப்பு ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (மாா்ச் 26) 2 மணிநேரம் மின் விநியோகம் இருக்காது என நாகை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். சித்திவிநாயகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகை நகரம், வேட்டைக்காரனிருப்பு ஆகிய துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, இந்தத் துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான நாகப்பட்டினம், நாகூா், வெளிப்பாளையம், மஞ்சக்கொல்லை, பொய்கைநல்லூா், சிக்கல், தோணித்துறை, வேளாங்கண்ணி, செருதூா், பரவை, நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், அரசு மருத்துவமனை, நாகூா் தா்கா, திருப்பூண்டி, புதுப்பள்ளி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு, கோவில்பத்து, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, தாமரைப்புலம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் 11 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.