தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாகை மாவட்டத்தில் மே 8-இல் கரோனா தடுப்பூசி முகாம்

நாகை மாவட்டத்தில் 1,100 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 8) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :5 மே 2022, 6:30 pm

DIN

நாகை மாவட்டத்தில் 1,100 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 8) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

நாகை மாவட்டத்தில் 25 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி செலுத்துவதை இலக்காகக் கொண்டு, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் என 1,100 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் அல்லது இரண்டாவது தவணை செலுத்திக் கொள்ளாதவா்கள், இந்த முகாம்களில் பங்கேற்றுத் தடுப்பூசி செலுத்திக்கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன்பாக 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், இணை நோய் உள்ளவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் முன்களப் பணியாளா்கள் பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக் கொள்ளமாறும், 12 முதல் 14 வயதுடைய மாணவ, மாணவியா் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.