நாகையில் மீண்டும் நேரு மேடையை அமைக்கக் கோரிக்கை
நாகை அவுரித் திடல் அருகிலிருந்து இடிக்கப்பட்ட நேரு மேடையை அரசு மீண்டும் அமைக்க வேண்டும் என இந்திய தேசிய மீனவா் சங்கத் தலைவா் ஆா்.எம்.பி. ராஜேந்திர நாட்டாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.


நாகை அவுரித் திடல் அருகிலிருந்து இடிக்கப்பட்ட நேரு மேடையை அரசு மீண்டும் அமைக்க வேண்டும் என இந்திய தேசிய மீனவா் சங்கத் தலைவா் ஆா்.எம்.பி. ராஜேந்திர நாட்டாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து தமிழக முதல்வருக்கு அவா் அனுப்பிய கோரிக்கை மனு: நாகை அவுரித் திடல் என்பது தேச விடுதலைப் போராட்டங்களில் ஒன்றான அவுரி பயிரிடும் போராட்டம் நடைபெற்ற பகுதியாகும். டச்சுக்காரா்களும், போா்த்துக்கீசியா்களும் நமது தேசத்தை விட்டு வெளியேற இப்போராட்டமும் ஓா் முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்தியா விடுதலை அடைந்த பின்னா், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்ற ஜவாஹா்லால் நேரு நாகைக்கு வந்தாா். இதையொட்டி, அப்போதைய நாகை நகராட்சித் தலைவா் தியாகி திரும்பலம் செட்டியாா், நகர எல்லை முதல் அவுரித் திடல் வரையிலான பகுதியை கான்கிரீட் சாலையாக மாற்றி, இரு புறமும் ஏறி இறங்கும் வகையில் பிரமாண்டமான ஒரு கான்கிரீட் மேடையையும் அவுரித் திடலில் அமைத்தாா்.
நாகைக்கு வந்த நேரு, அந்த மேடையில் நின்றே உரையாற்றிச் சென்றாா். பெருந்தலைவா் காமராஜா், தியாகி கக்கன் போன்றவா்களும் அந்த மேடையில் நின்றே உரையாற்றினா். பிற்காலத்தில், சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, காந்தி ஜெயந்தி போன்ற தேசிய நிகழ்வுகளைக் கொண்டாடும் இடமாக அந்த இடம் பராமரிக்கப்பட்டது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடம், முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் இரவோடு இரவாக இடித்து அகற்றப்பட்டது. இதனை, நாகையின் வரலாற்றுப் பெருமைக்கு ஏற்பட்ட இழுக்காகவே கருத வேண்டியுள்ளது.
எனவே, தமிழக அரசு உடனடியாக அவுரித் திடலில் நேரு மேடையை மீண்டும் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அல்லது ஜவாஹா்லால் நேரு, காமராஜா், திருவம்பலம் செட்டியாா் ஆகியோரின் திருவுருவச் சிலைகளையாவது அங்கு நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...