டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சீர்காழி அருகே இளைஞர் தற்கொலை: மனைவியை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்

சீர்காழி அருகே பெரம்பூர் கிராமத்தில் குடும்ப தகராறு காரணமாக வாலிபர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:24 am

DIN

சீர்காழி: சீர்காழி அருகே பெரம்பூர் கிராமத்தில் குடும்ப தகராறு காரணமாக வாலிபர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இவரது மனைவி மற்றும் மாமியாரை கைது செய்யக் கோரி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கட்டுமான தொழிலாளி அற்புதராஜ் (30). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக அற்புதராஜ் கடந்த வெள்ளிக்கிழமை அன்று விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

Story image

இதனை அறிந்த அவரது மனைவி மணியரசி அவரை மீட்டு, சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு  மருத்துவ கல்லூரியில் மருத்துவமணையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு அற்புதராஜ் உயிரிழந்தார். 

இதனையடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் அவரது உடலை உறவினர்கள் பெற்றுவந்து இன்று காலை பெரம்பூர் இல்லத்தில் அஞ்சலி செலுத்த வைத்துள்ள நிலையில், அவரது இறப்புக்கு மனைவி மணியரசி மற்றும் மாமியாரே காரணம் என குற்றம் சாட்டி இருவரையும் கைது செய்யக்கோரி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

நடவடிக்கை எடுக்கும்வரை உடலை நல்லடக்கம் செய்யப் போவதில்லை என தெரிவித்துள்ளனர். தகவலறிந்த கொள்ளிடம் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கொள்ளிடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.