வேளாங்கண்ணியில் உள்ள சொகுசு விடுதியில் வருமான வரித்துறையினர் சோதனை
By DIN | Published On : 15th June 2022 03:23 PM | Last Updated : 15th June 2022 03:26 PM | அ+அ அ- |

வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் வேளாங்கண்ணியில் உள்ள எம்.ஜி.எம்.நிறுவனத்துக்குச் சொந்தமான சொகுசு விடுதி.
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள எம்.ஜி.எம் சொகுசு விடுதியில் வருமான வரித்துறையினர் புதன்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்திலுள்ள எம்.ஜி.எம் குழும நிறுவனங்களுக்குச் சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் புதன்கிழமை சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: அமலாக்கத்துறை இயக்குநரகம் முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
இதன் ஒரு பகுதியாக, நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரைச் சாலையில் வேளாங்கண்ணி பேராலயம் நுழைவு வாயில் அருகே உள்ள எம்.ஜி.எம் நிறுவனத்துக்குச் சொந்தமான சொகுசு விடுதியில் 2 கார்களில் வந்த 4 பேர் கொண்ட வருமானத்துறையினர் புதன்கிழமை காலை 7 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகள் முறையாக செலுத்தப்பட்டுள்ளதா? விடுதி ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொகுசு விடுதியின் அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்ட நிவையில், வருமான வரித்துறையினர் காலை முதல் சோதனை நடத்திவருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...