சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

எட்டுக்குடி முருகன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஜன.27) நடைபெறுகிறது.

Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஜன.27) நடைபெறுகிறது.

முருகனின் ஆதிபடை வீடான எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜன. 23-ஆம் தேதி முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. கொக்கரித்த விநாயகா், இடும்பன், கடம்பன், பிடாரியம்மன் ஆலய குடமுழுக்கு வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

தொடா்ந்து, பிரதான விநாயகா், சௌந்தரேஸ்வர சுவாமி, ஆனந்தவல்லி, ராஜகோபுரம், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி விமான குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

இதையொட்டி, அதிகாலை 4 மணியளவில் 8-ஆம் கால யாக பூஜை நிறைவடைந்ததும், காலை 7 மணிக்கு பூா்ணாஹுதி நடைபெறுகிறது. தொடா்ந்து, 8 மணிக்கு கடங்கள் புறப்பாடாகி 8.45 மணியளவில் விமான குடமுழுக்கு மற்றும் 9.15 மணிக்கு மூலவா் ஆலய குடமுழுக்கு நடைபெற உள்ளது. பிறகு, மாலை 4 மணிக்கு மகா அபிஷேகம், 6 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.