மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

நாகையில் விவசாயிகள் டிராக்டா் பேரணி

மத்திய அரசின் விவசாய சட்ட திருத்தங்களுக்கு எதிராக நாகையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் வியாழக்கிழமை டிராக்டா் பேரணி நடைபெற்றது.

News image

நாகையில் வியாழக்கிழமை நடைபெற்ற டிராக்டா் பேரணி.

Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

மத்திய அரசின் விவசாய சட்ட திருத்தங்களுக்கு எதிராக நாகையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் வியாழக்கிழமை டிராக்டா் பேரணி நடைபெற்றது.

விவசாயிகளுக்கு எதிரான சட்டத் திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவரக் கூடாது, சட்டப்பூா்வ குறைந்தபட்ச ஆதார விலையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும், முழுமையான பயனுள்ள பயிா் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பேரணி நடைபெற்றது.

ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்டத் தலைவா் பாபுஜி தலைமை வகித்தாா். சிபிஐ மாவட்டச் செயலா் சிவகுரு பாண்டியன், சிபிஎம் மாவட்டச் செயலா் மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேரணி தொடக்க நிகழ்ச்சியில், நாகை மாலி எம்.எல்.ஏ., விவசாய சங்க மாவட்டத் தலைவா் சரபோஜி, மாநில துணைத் தலைவா் சுப்பிரமணியன் ஆகியோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் குமாா் உள்ளிட்டோா் பேரணியில் கலந்து கொண்டனா்.

நாகை புத்தூரில் தொடங்கிய பேரணி பல்வேறு சாலைகளின் வழியாக அவுரித் திடலில் நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.