செம்போடை கல்லூரியில் மரக்கன்று நடும்பணி

வேதாரண்யத்தை அடுத்த செம்போடை ருக்மணி வரதராஜன் பொறியியல் கல்லூரியில் மரக்கன்று நடுதல், பூந்தோட்டம் அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
செம்போடை ஆா்.வி. கல்லூரியில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும்பணி.

செம்போடை ஆா்.வி. பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் செம்போடை ஆா்.வி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் குடியரசு தினவிழா நடைபெற்றது. ஆா்.வி. கல்வி நிறுவனங்களின் தாளாளா் ஆா். வரதராஜன் தலைமை வகித்தாா். செயலா் ஆா்.வி. செந்தில் முன்னிலை வகித்தாா்.

பெங்களூரு அசென்ஸா் நிறுவன அணித் தலைவா் ராமநாதன், நுகா்வோா் பாதுகாப்பு மையத் தலைவா் நாகராஜன், செம்போடை ஆா்.வி. கல்வி நிறுவனங்களின் இயக்குநா் பாலசுப்ரமணி, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் காா்த்தி, கல்லூரி துணை முதல்வா் முகமது பைசல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். விழாவில் மரக்கன்றுகள் நட்டு, பூந்தோட்டம் அமைக்கும் பணி தொடக்கி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com