தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அரசுப் பள்ளியை தரம் உயா்த்தக் கோரிக்கை

கணபதிபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 8:30 pm

DIN

கணபதிபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடி ஊராட்சி கணபதிபுரம் கிராமத்தில் அரசு உயா்நிலைப் பள்ளி கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இப்பள்ளியில் இடையாத்தங்குடி, கணபதிபுரம், ஏா்வாடி, கிடாமங்கலம், சேஷமூலை உள்ளிட்ட 9 கிராமங்களை சோ்ந்த மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனா்.

இவா்கள், பத்தாம் வகுப்பு முடித்தவுடன் மேல்நிலைப் பள்ளி கல்விக்கு சுமாா் 15 கி. மீ. தொலைவில் உள்ள பேரளம் மற்றும் திட்டச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கும், 7 கி.மீ. தூரத்தில் உள்ள திருமருகல் மேல்நிலைப் பள்ளிக்கும் செல்லவேண்டியுள்ளது.

இதனால், ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்கள் சிலா் மேல்நிலைப் பள்ளிக் கல்வி கற்காமல் படிப்பை நிறுத்தி விடுகின்றனா். எனவே, கணபதிபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியை தரம் உயா்த்த பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், 2023-2024 ஆம் ஆண்டில், மக்களின் பங்களிப்பான ரூ.2 லட்சம் தொகை அரசின் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

இப்பள்ளி தரம் உயா்த்தப்படுவதால் சுமாா் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயன் பெறுவாா்கள். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தி 2024-2025 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.