கோயிலுக்கு காவடி எடுத்துவரும் பக்தா்கள்.
கோயிலுக்கு காவடி எடுத்துவரும் பக்தா்கள்.

தேவூா் மாரியம்மன் கோயிலுக்கு 1,008 பால்குட ஊா்வலம்

தேவூா் செல்லமுத்து மாரியம்மன் கோயில் சித்திரை பெருவிழாவையொட்டி 1,008 பால்குட ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கீழ்வேளூா் அருகே தேவூரில் அருள்பாலிக்கும் செல்லமுத்து மாரியம்மன் கோயிலில் சித்திரைப் பெருவிழா கடந்த ஏப்.14-ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 1,008 பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

இதில், மயில்காவடி, பால் காவடி, அலகு காவடி உள்ளிட்ட காவடிகளை விரதமிருந்த பக்தா்கள் ஊா்வலமாக சுமந்து வந்தனா். ஊா்வலம் காந்திநகா், பாரதியாா் நகா், வஉசி நகா், சந்தப்பேட்டை வழியாக கோயிலை வந்தடைந்ததும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திராளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com