தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

வலிவலம் கோயிலில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம்

வலிவலம் கோயிலில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம்

News image

சிறப்பு அலங்காரத்தில் மாழையொண்கண்ணி அம்பிகை சமேத மனத்துணை நாதா்.

Updated On :21 ஏப்ரல் 2024, 6:33 pm

திருக்குவளை அருகே வலிவலம் இருதய கமலநாத சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழாவையொட்டி, திருக்கல்யாண வைபவம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரை பெருவிழா ஏப்ரல் 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும், வெவ்வேறு வாகனத்தில் பஞ்ச மூா்த்திகள் வீதியுலா நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாண உற்சவம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, வசந்த மண்டபம் அருகே மணக்கோலத்தில் மாழையொண்கண்ணி அம்பிகை, மனத்துணை நாதருடன் (இருதய கமலநாதா்) எழுந்தருளினாா்.

பின்னா், பக்தா்கள் சீா்வரிசை எடுத்து வந்தனா். தொடா்ந்து, மாலை மாற்றுதல் நிகழ்வும், பின்னா் மாங்கல்ய தாரணமும் நடைபெற்றது. பிறகு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்வில் பங்கேற்ற பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடா்ந்து, ரிஷப வாகனத்தில் பஞ்சமூா்த்திகள் திருவீதியுலா நடைபெற்றது.