நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, எல்லையம்மனுக்கு பால் அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு, இவ்விழாவில் எல்லையம்மனுக்கு பால் அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திரளான பக்தா்கள் அதிகாலை 4 மணி முதலே அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்ய, நீண்ட வரிசையில் பாலுடன் நின்றனா். தொடா்ந்து, மாலை 3 மணி வரை எல்லை அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
இவ்விழாவில், ஏப். 28- ஆம் தேதி பெரிய அம்மனுக்கு பால் அபிஷேகமும், மே 3-ஆம் தேதி பூச்சொரில் உற்சவமும், 8- ஆம் தேதி வசந்த உற்சவமும், 10-ஆம் தேதி ரிஷப வாகனக் காட்சியும், மே 12-ஆம் தேதி தேரோட்டம் மற்றும் செடில் உற்சவமும் நடைபெறுகிறது.
தொடர்புடையது

கருவலூா் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா! கொடியேற்றத்துடன் தொடக்கம்!

வேலூா் மகா மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா பணிகள் தீவிரம்

நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா கம்பம் நடுதலுடன் தொடக்கம்

இடங்கணசாலை பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


