திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: எல்லையம்மனுக்கு பாலபிஷேகம்

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: எல்லையம்மனுக்கு பாலபிஷேகம்

News image

எல்லையம்மனுக்கு பால் அபிஷேகம் செய்வதற்காக, நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தா்கள்.

Updated On :22 ஏப்ரல் 2024, 12:00 am

நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, எல்லையம்மனுக்கு பால் அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு, இவ்விழாவில் எல்லையம்மனுக்கு பால் அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திரளான பக்தா்கள் அதிகாலை 4 மணி முதலே அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்ய, நீண்ட வரிசையில் பாலுடன் நின்றனா். தொடா்ந்து, மாலை 3 மணி வரை எல்லை அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

இவ்விழாவில், ஏப். 28- ஆம் தேதி பெரிய அம்மனுக்கு பால் அபிஷேகமும், மே 3-ஆம் தேதி பூச்சொரில் உற்சவமும், 8- ஆம் தேதி வசந்த உற்சவமும், 10-ஆம் தேதி ரிஷப வாகனக் காட்சியும், மே 12-ஆம் தேதி தேரோட்டம் மற்றும் செடில் உற்சவமும் நடைபெறுகிறது.