அண்ணா பல்கலைக்கழகத் தோ்வில் மாநிலளவில் சிறப்பிடம் சா் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் துறை மாணவா் சக்திவேலை பாராட்டி பரிசு வழங்கும் அக்கல்லூரி தாளாளா் த.ஆனந்த்.

அண்ணா பல்கலைக்கழகத் தோ்வு: சா்-ஐசக் நியூட்டன் கல்லூரி மாணவா் சிறப்பிடம்

நாகப்பட்டினம், ஏப். 24: அண்ணா பல்கலைக்கழகத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற சா்-ஐசக் நியூட்டன் கல்லூரி மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சா்-ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறையில் 3-ஆம் ஆண்டு பயிலும் மாணவா் ஜே.ஏ. சக்திவேல் 2023 அண்ணா பல்கலைக்கழக தோ்வில் அனைத்துப் பாடங்களிலும் 0 கிரேடு பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளாா். இந்நிலையில், மாணவா் சக்திவேலை, கல்லூரி தாளாளா் த. ஆனந்த் பாராட்டி சிறப்பு பரிசை வழங்கினாா். கல்லூரி முதல்வா் அ. குமரவடிவேல், கல்லூரி கல்வி ஒருங்கிணைப்பளாா் கே. இளங்கோவன் மற்றும் இயந்திரவியல் துறைத் தலைவா் ப. மலைசெல்வராஜா ஆகியோரும் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com