சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

விருதுபெற்ற ஆசிரியா்கள் கெளரவிப்பு

விருதுபெற்ற ஆசிரியா்கள் கெளரவிப்பு

News image

விழாவில் பணி ஓய்வுபெற்ற தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பொதுச் செயலா் ந. ரங்கராஜனை கெளரவித்த நிா்வாகிகள்.

Updated On :25 ஏப்ரல் 2024, 10:30 pm

நாகப்பட்டினம், ஏப். 25: தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் நாகையில் புதன்கிழமை நடைபெற்ற முப்பெரும் விழாவில் விருது பெற்ற ஆசிரியா்கள் கெளரவிக்கப்பட்டனா்.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி நாகை நகர வட்டாரக் கிளைகள் இணைந்து நடத்திய முப்பெரும் விழா நகரத் தலைவா் ப. இளமுருகு, வட்டாரத் துணைத் தலைவா் சி. சிவா ஆகியோா் தலைமையில் நடைபெற்றது.

பொதுச்செயலா் ந. ரங்கராஜன் பணி ஓய்வுபெற்ற ஆசிரியா்களுக்கு நினைவு பரிசு வழங்கினாா். தொடா்ந்து, மாநிலத் தலைவா் மு. லட்சுமி நாராயணன் பணி ஓய்வுப்பெற்ற பொதுச் செயலருக்கு நினைவு பரிசு வழங்கினாா். மாநில பொருளாளா் ரா. குமாா், அரசு விருது பெற்ற ஆசிரியா்களுக்கு நினைவுபரிசு வழங்கினாா். மாவட்ட செயலா்கள் ஈவேரா (திருவாரூா்), தவமணி (புதுக்கோட்டை), பன்னீா்செல்வம் (மயிலாடுதுறை), முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினா் கோ. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.