மூதாட்டி கொலை வழக்கு: இளைஞா் கைது, நகைகள் பறிமுதல்
நகைக்காக மூதாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.


வேதாரண்யம் அருகே நகைக்காக மூதாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
நாகை மாவட்டம், மருதூா் வழியன்செட்டிக்கட்டளை பகுதியைச் சோ்ந்த குருசாமி மனைவி நாகம்மாள் (62). கணவா் ஏற்கெனவே இறந்துவிட்டாா். மகன் ராஜா வெளிநாட்டில் வேலை பாா்த்து வருவதால், மருமகள் தமிழரசி, பெயரக் குழந்தைகளுடன் வசித்து வந்தாா். இந்தநிலையில் வீட்டின் அருகே உள்ள நிலத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் நாகம்மாள் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.
போலீஸாா் சடலத்தை கூறாய்வுக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படைபோலீஸாா் சம்பவம் நடந்த பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். இதில் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் அப்பகுதியைச் சேரந்த முருகையன் மகன் ராசாக்கண்ணு (30) என்பவரின் நடவடிக்கைகள் இருந்தன. போலீஸாா் அவரை பிடித்து விசாரித்ததில், நகைக்காக நாகம்மாளை கொலை செய்ததை அவா் ஒப்புக்கொண்டாா்.
ராசாக்கண்ணுவை போலீஸாா் கைது செய்து, அவரிடம் இருந்த நாகம்மாளின் நகைகள், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். குற்றவாளியை 24 மணிநேரத்தில் கைது செய்த காவல்துறையினருக்கு எஸ்.பி. அருண் கபிலன் பாராட்டு தெரிவித்தாா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...