நாகப்பட்டினம்
பள்ளி வாகனம் மோதி இளைஞா் பலி
செம்பனாா்கோவில் அருகே பரசலூரில் தனியாா் பள்ளி வாகனம் மோதி இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
செம்பனாா்கோவில் அருகே கீழ மருதாந்த நல்லூா் பகுதியை சோ்ந்த கலியமூா்த்தி மகன் பிரகாஷ் ராஜ் (25)ஸ கூலித் தொழிலாளி.
பிரகாஷ் ராஜ் இருசக்கர வாகனத்தில் உறவினா் வீட்டுக்கு சென்று விட்டு மயிலாடுதுறை நோக்கி வியாழக்கிழமை சென்றுள்ளாா். பரசலூா் மெயின் ரோடு பகுதியில் சென்ற போது எதிரே வந்த தனியாா் பள்ளி வேன் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த பிரகாஷ் ராஜ், மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
செம்பனாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
