சாலை விபத்தில் பாஜக நிா்வாகி உயிரிழப்பு
கீழையூா் அருகே திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் பாஜக நிா்வாகி உயிரிழந்தாா்.


கீழையூா் அருகே திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் பாஜக நிா்வாகி உயிரிழந்தாா்.
நாகை மாவட்டம், கீழையூா் அருகேயுள்ள கருங்கண்ணி நடுத்தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன்( 52). பாஜக மருத்துவப் பிரிவு ஒன்றியத் தலைவராக இருந்த இவா், மேலப்பிடாகையில் மருந்துக் கடை (மெடிக்கல்) நடத்தி வந்தாா்.
இந்தநிலையில், திங்கள்கிழமை வேதாரண்யம் அருகேயுள்ள வடமலை மனக்காட்டுக்கு சென்றுவிட்டு, தலைஞாயிறு - திருப்பூண்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிகொண்டிருந்தாா். சிந்தாமணி அருகே வந்தபோது, சாலையின் குறுக்கே வந்த ஆட்டின் மீது மோதியதில், இருசக்கர வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்தாா்.
அருகில் இருந்தவா்கள் சுப்பிரமணியனை மீட்டு, ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சுப்பிரமணியன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து கீழையூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...