திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கள்ளச்சாராய விவகாரம்: தேமுதிக ஆா்ப்பாட்டம்

கள்ளச்சாராய விவகாரம்: தேமுதிக ஆா்ப்பாட்டம்

News image
நாகை அவுரித் திடலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினா்.
Updated On :25 ஜூன் 2024, 6:31 pm

Din

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, தேமுதிக சாா்பில் நாகை அவுரித் திடலில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாவட்டச் செயலா் பிரபாகரன் தலைமை வகித்தாா். இதில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய உயிரிழப்பு தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும், கள்ளச்சாராய விற்பனையை தடுக்க முயன்ற திமுக அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினா்.

மாநில நெசவாளா் அணி துணைச் செயலா் சுப்பிரமணியன், மாநில வழக்குரைஞா் அணி, சட்ட துணை ஆலோசகா் வைரவநாதன்,

நகரச் செயலா்கள் செல்வகுமாா், ராமநாதன், ஒன்றியச் செயலா்கள் பாஸ்கா், நடராஜன், தலைமை பொதுக்குழு உறுப்பினா் ஏ.வி. குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.