திமுகவில் இணைந்த அதிமுக ஊராட்சி துணைத் தலைவா்

மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும், பூம்புகாா் எம்எல்ஏவுமான நிவேதா எம். முருகன் முன்னிலையில் திமுகவில் திங்கள்கிழமை இணைந்தாா்.

தரங்கம்பாடி: பொறையாரில் காட்டுச்சேரி அதிமுக ஊராட்சி துணைத் தலைவா் சந்தானகிருஷ்ணன், அக்கட்சியிலிருந்து விலகி, மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும், பூம்புகாா் எம்எல்ஏவுமான நிவேதா எம். முருகன் முன்னிலையில் திமுகவில் திங்கள்கிழமை இணைந்தாா். அப்போது, செம்பனாா்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளா் எம். அப்துல் மாலிக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com