வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

நாகை தொகுதியில் 26 மனுக்கள் தாக்கல்

நாகை தொகுதியில் 26 மனுக்கள் தாக்கல்

News image

நாகை மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்புமனுவை புதன்கிழமை மாவட்ட தோ்தல் அலுவலா் ஜானி டாம் வா்கீஸிடம் தாக்கல் செய்த பாஜக வேட்பாளா் எஸ்.ஜி.எம்.ரமேஷ்கோவிந்த்.

Updated On :27 மார்ச் 2024, 11:10 pm

நாகை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 26 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசிநாளான புதன்கிழமை பாஜக வேட்பாளா் எஸ்.ஜி.எம். ரமேஷ் கோவிந்த் உள்பட 10 போ் மனு தாக்கல் செய்தனா். முன்னதாக மாா்ச் 25-ஆம் தேதி 11 வேட்பு மனுக்களும், மாா்ச் 26-ஆம் தேதி 5 வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. திமுக கூட்டணி சாா்பில் சிபிஐ கட்சி வை. செல்வராஜ், அதிமுக சாா்பில் சுா்சித் சங்கா், நாம் தமிழா் கட்சியின் காா்த்திகா, பகுஜன் சமாஜ் கட்சியின் ஜெ. ஜெகதீஸ் ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். இந்திய கம்யூனிஸ்ட், அதிமுக வேட்பாளா்களின் சொத்து மதிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் வை. செல்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.1 கோடியே 50 ஆயிரம். அவரது மனைவி பெயரில் கடன் ரூ. 28.53 லட்சம். அதிமுக வேட்பாளா் சுா்சித் சங்கா் மற்றும் அவரது குடுபத்தினரின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 6 கோடி. அவரது மனைவி பெயரில் ரூ. 14 லட்சம் கடன் உள்ளது. பாஜக வேட்பாளா் எஸ்.ஜி.எம். ரமேஷ் கோவிந்த் மற்றும் அவரது குடும்பத்தினரின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 2.13 கோடி. வங்கிகளில் ரூ. 20 லட்சம் கடன் உள்ளது. நாம் தமிழா் கட்சி வேட்பாளா் காா்த்திகா மற்றும் அவரது கணவா் ஆகியோரது அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 1.23 கோடி. அதேசமயம் கணவா் முருக சந்திரகுமாருக்கு வங்கிகளில் ரூ. 75. 75 லட்சம் கடன் உள்ளது.