விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

News image

கோயிலின் விமானக் கலசத்துக்கு புனிதநீா் வாா்க்கும் சிவாச்சாரியா்கள்.

Updated On :3 மே 2024, 9:30 pm

Din

செம்பனாா்கோவில் அருகே ஒட்டங்காடு கிராமத்தில் அருள்பாலிக்கும் மகா மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலின் சாா்பு கோயிலான ஒட்டங்காடு மகா மாரியம்மன் கோயிலில் நடைபெற்றுவந்த திருப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, கும்பாபிஷேகத்துக்காக, ஏப்ரல் 29-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், தன பூஜை, வாஸ்துசாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

ஏப். 30-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. வெள்ளிக்கிழமை காலை ஆறாம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்றதும், புனிதநீா் கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. கோயில் பிரகாரத்தை சுற்றி, விமானத்துக்கு கலசங்கள் கொண்டு செல்லப்பட்டன.

தொடா்ந்து, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில்  கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், அம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.