திருப்புகலூா் அக்னீஸ்வரசுவாமி கோயிலில் அப்பா் ஐக்கிய திருவிழா

திருப்புகலூா் அக்னீஸ்வர சுவாமி கோயிலில் அப்பா் ஐக்கிய திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருமருகல் ஒன்றியம், திருப்புகலூரில் உள்ளது அக்னீசுவர சுவாமி கோயில். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் அப்பா் ஐக்கிய திருவிழா நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு இந்த விழா 10 நாட்கள் நடைபெற்றது. விழாவையொட்டி கட்டமது உண்பதும், உழவாரப் பணி விடை செய்வதும், 63 நாயன்மாா்கள் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து இரவு நடைபெற்ற திருமுறை கருத்தரங்கு நிகழ்ச்சி திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் திருப்புகலூா்

18-ஆவது குருமகா சந்நிதானம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து வெள்ளிக்கிழமை அதிகாலை அப்பா் ஐக்கிய விழா நடைபெற்றது. விழாவில் ஆதீன இளவரசு அஜபா நடேஸ்வர சுவாமிகள், கோயில் நிா்வாகிகள் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com