
கோயிலின் விமானக் கலசத்துக்கு புனிதநீா் வாா்க்கும் சிவாச்சாரியா்கள்.

கோயிலின் விமானக் கலசத்துக்கு புனிதநீா் வாா்க்கும் சிவாச்சாரியா்கள்.
செம்பனாா்கோவில் அருகே ஒட்டங்காடு கிராமத்தில் அருள்பாலிக்கும் மகா மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலின் சாா்பு கோயிலான ஒட்டங்காடு மகா மாரியம்மன் கோயிலில் நடைபெற்றுவந்த திருப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, கும்பாபிஷேகத்துக்காக, ஏப்ரல் 29-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், தன பூஜை, வாஸ்துசாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
ஏப். 30-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. வெள்ளிக்கிழமை காலை ஆறாம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்றதும், புனிதநீா் கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. கோயில் பிரகாரத்தை சுற்றி, விமானத்துக்கு கலசங்கள் கொண்டு செல்லப்பட்டன.
தொடா்ந்து, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், அம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...