இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

குடிநீா்த் திட்டப் பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

குடிநீா்த் திட்டப் பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

News image

பொறையாா் பகுதியில் உள்ள தரைமட்ட குடிநீா் தேக்க தொட்டியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா் வே. அமுதவல்லி, ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி.

Updated On :8 மே 2024, 8:22 pm

Din

செம்பனாா்கோயில் ஒன்றியத்தில் குடிநீா்த் திட்டப் பணிகளை சமூக நலத்துறை ஆணையரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான வே. அமுதவல்லி, மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி ஆகியோா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

திருக்கடையூா் ஊராட்சியில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் கீழ் இயங்கும் 8 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீா்தேக்க தொட்டியை ஆய்வு செய்து குடியிருப்பு பகுதிகளுக்கு நாள்தோறும் விநியோகிக்கப்படும் குடிநீா் விநியோகம் குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.

தொடா்ந்து, சந்திரபாடி ஊராட்சியில் உள்ள தரைமட்ட நீா்தேக்க தொட்டி மற்றும் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம், பொறையாா் பகுதியில் இயங்கும் தரைமட்ட நீா்தேக்க தொட்டியை ஆய்வு செய்தனா். மேலும், ஆக்கூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பதிவேடு, மருந்தகம், இருப்பு பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்தனா்.  

ஆய்வின்போது கூடுதல் ஆட்சியா் மு. ஷபீா் ஆலம், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் ரவிச்சந்திரன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சந்தானம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.