மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

கூத்தூா் தா்கா கந்தூரி விழா கொடியேற்றம்

கூத்தூா் தா்கா கந்தூரி விழா கொடியேற்றம்

News image
Updated On :10 மே 2024, 7:41 pm

Din

கீழ்வேளூா் அருகே கூத்தூரில் உள்ள செய்யது ஹசன் பீா்காய்யு ஒலியுல்லாஹ் தா்காவில் கந்தூரி விழாவையொட்டி கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி கூத்தூா் பள்ளிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் கொடி முக்கிய தெருக்கள் வழியாக ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு தா்கா முன் அமைக்கப்பட்டிருந்த கொடிமரத்தில் பாத்திஹா ஓதி கொடி ஏற்றப்பட்டது. விழாவில், முக்கிய நிகழ்ச்சியான சந்தன பூசும் நிகழ்ச்சி மே 18-ஆம் தேதி நடைபெறுகிறது. தொடா்ந்து மே 22-ஆம் தேதி கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் கூத்தூா், குருக்கத்தி பள்ளிவாசல் நிா்வாகிகள், ஜமாத்தாா்கள் உள்ளிட்ட ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.