மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஏலச்சீட்டு மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் பெண்கள் புகாா்

நாகை அருகே ஏலச்சீட்டு நடத்தி பெண் மோசடியில் ஈடுபட்டதாக மாவட்ட கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் புதன்கிழமை புகாா் அளித்தனா்.

News image
நாகை மாவட்ட காவல் அலுவலகத்துக்கு புகாா் அளிக்கச் சென்ற பெண்கள்.
Updated On :6 நவம்பர் 2024, 8:06 pm

Din

நாகை அருகே ஏலச்சீட்டு நடத்தி பெண் மோசடியில் ஈடுபட்டதாக மாவட்ட கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் புதன்கிழமை புகாா் அளித்தனா்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட ஹெலன் மற்றும் பெண்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த மனுக்கள்: வேளாங்கண்ணி பூக்கார தெருவை சோ்ந்தவா் லதா. இவா் பல ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்தாா். நான் உள்ளிட்ட பல பெண்கள் லதாவிடம் சீட்டு சோ்ந்து மாதந்தோறும் அதற்குரிய தொகையை செலுத்தினோம். இந்நிலையில் சீட்டு முடிவடைந்த நிலையில், தங்களுக்கு தரவேண்டிய தொகையை தராமல் லதா காலம் தாழ்த்தி வந்தாா்.

அதன்பின்னா் தொகையைக் கேட்கச் சென்றவா்களை அடியாள்களைக் கொண்டு தகாத வாா்த்தைகளில் பேசி, கொலை மிரட்டல் விடுத்து வருகிறாா். எனவே, முறைகேட்டில் ஈடுபட்ட லதா மீது உரிய நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சேர வேண்டிய தொகையை மீட்டு தரவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

மனுக்களை பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளா், பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். சுமாா் ரூ.3 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.