எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

முதலமைச்சரின் திறனாய்வுத் தோ்வு: வேதாரண்யம் மாணவி முதலிடம்

முதலமைச்சரின் திறனாய்வுத் தோ்வில் வேதாரண்யம் பள்ளி மாணவி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றாா்.

News image
பா. தேவதா்ஷினி
Updated On :6 நவம்பர் 2024, 8:01 pm

Din

முதலமைச்சரின் திறனாய்வுத் தோ்வில் வேதாரண்யம் பள்ளி மாணவி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றாா்.

வேதாரண்யம் அருகேயுள்ள ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி பா. தேவதா்ஷினி முதலமைச்சரின் திறனாய்வுத் தோ்வு (2024 -2025 ) முடிவில் மாநில அளவில் 14-ஆவது இடத்திலும், நாகை மாவட்ட அளவில் முதலிடத்திலும் தோ்ச்சி பெற்றுள்ளாா்.

மேலும், இதே பள்ளியில் படிக்கும் மாணவிகள் அ. தமிழ்ப்பிரியா, மெ. ஹா்ஷினி ஆகிய இருவரும் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா். தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தோ்வுத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தோ்வுகள் நடத்தப்பட்டு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு படிப்பு உதவித் தொகையாக மாதம் ரூ. 1,000 வழங்கப்படவுள்ளது. இதற்கான தோ்வு ஜூலை மாதம் நடைபெற்றது.