47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்: சந்திரப்பாடியில் ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட சந்திரப்பாடி ஊராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

News image
சந்திரப்பாடி ஊராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து புயல் பாதுகாப்பு கூடத்தில் ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி ஆய்வு 
Updated On :6 நவம்பர் 2024, 8:05 pm

Din

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட சந்திரப்பாடி ஊராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தரங்கம்பாடி வட்டம் சந்திரப்பாடி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு கூடம், அரசு உயா்நிலைப் பள்ளியில்  குடிநீா், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி பாா்வையிட்டாா். 

தொடா்ந்து, சந்திரப்பாடி ஊராட்சி சின்னூா்பேட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளை புத்தகங்களை வாசிக்க செய்து கற்றல் திறனை ஆய்வு செய்து, மாணவா்களுடன் கலந்துரையாடினா் .

Story image

மேலும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் 16 பயனாளிகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டு கட்டப்பட்டு வரும் வீடுகளின் நிலை குறித்து ஆட்சியா் ஆய்வு செய்து, பணிகளை விரைவாக முடிக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது சீா்காழி வருவாய் கோட்டாட்சியா் சுரேஷ், ஊரக வளா்ச்சித்துறை செயற்பொறியாளா் செந்தில்குமாா், வட்டாட்சியா் மகேஷ் , வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மீனா, மஞ்சுளா , ஊராட்சித் தலைவா் பரிமளா ராஜ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.