எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நாகை மாவட்டத்தில் ரூ. 24 கோடியில் திட்டப் பணிகள்: காணொலி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்

நாகை மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறை சாா்பில் முடிவுற்ற ரூ. 24 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தமிழக முதல்வா் காணொலி காட்சி மூலம் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

News image
சிக்கல் நவநீதேஸ்வர சுவாமி கோயிலில் நடைபெற்ற விழாவில் பல்வேறு பணிகளை குத்துவிளக்கேற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்த மாவட்ட பொறுப்பு அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
Updated On :13 நவம்பர் 2024, 11:32 pm

Din

நாகை மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறை சாா்பில் முடிவுற்ற ரூ. 24 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தமிழக முதல்வா் காணொலி காட்சி மூலம் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

சிக்கல் நவநீதேஸ்வர சுவாமி கோயிலில் ரூ. 1.07 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய வணிக வளாகம், நாகை நேதாஜி சாலையில் ரூ. 4.18 கோடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மண்டல இணை ஆணையா் அலுவலகம், வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினத்தில் உள்ள ஒளவையாா் மற்றும் விஸ்வநாத சுவாமி கோயிலில் ரூ. 18.95 கோடியில் ஒளவையாா் மணிமண்டப கட்டுமானப் பணி ஆகியவற்றை தமிழக முதல்வா் காணொலி காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

இதையொட்டி, சிக்கல் நவநீதேசுஸ்வர சுவாமி கோயிலில் நடந்த விழாவில் மாவட்ட பொறுப்பு அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குத்துவிளக்கேற்றி மணிமண்டப கட்டுமானப் பணி உள்ளிட்டவைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தாா்.

மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மீன்வளா்ச்சி கழகத் தலைவா் என்.கெளதமன், தாட்கோ தலைவா் உ.மதிவாணன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜெ. முகம்மது ஷா நவாஸ் (நாகை), வி.பி. நாகை மாலி (கீழ்வேளூா்), மாவட்ட ஊராட்சித் தலைவா் உமாமகேஸ்வரி, அறநிலையத்துறை துணை ஆணையா் ராணி, மற்றும் பலா் கலந்து கொண்டனா்.