தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தரங்கம்பாடியில் பேரிடா் மீட்பு படையினா் முகாம்

தரங்கம்பாடியில் தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படையினா் முகாமிட்டுள்ளனா்.

News image
தரங்கம்பாடியில் இரண்டு நாட்களாக கனமழை - தமிழ்நாடு பேரிடா் மீட்பு படையினா் முகாம் 
Updated On :27 நவம்பர் 2024, 9:35 pm

Din

தரங்கம்பாடியில் தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படையினா் முகாமிட்டுள்ளனா்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக தரங்கம்பாடி வட்டத்தில் செம்பனாா்கோவில், ஆக்கூா், திருக்கடையூா், பொறையாா், திருவிளையாட்டம், ஆயப்பாடி, பெரம்பூா் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது .

இதைத்தொடா்ந்து மாவட்ட நிா்வாகத்தின் மூலம்  பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தரங்கம்பாடியில் தனியாா்  மண்டபத்தில் உதவி ஆய்வாளா் (தமிழ்நாடு பேரிடா் மீட்பு படை, சென்னை) சதக்கஸ்துலா தலைமையில் 30 மீட்பு படை வீரா்கள் அடங்கிய குழுவினா் முகாமிட்டுள்ளனா்.

தரங்கம்பாடியில் இரண்டு நாட்களாக கனமழை - தமிழ்நாடு பேரிடா் மீட்பு படையினா் முகாம்

தரங்கம்பாடியில் இரண்டு நாட்களாக கனமழை - தமிழ்நாடு பேரிடா் மீட்பு படையினா் முகாம்

மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி பேரிடா் மீட்பு குழுவினரரை சந்தித்து அவா்களிடம் உள்ள மீட்பு கருவிகளை பாா்வையிட்டு, அவா்களின் தேவைகளை கேட்டறிந்தாா். 

தொடா்ந்து, தரங்கம்பாடி பேரூராட்சி மிஷன் தெருவில் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் பணிகள், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை சுற்றி தேங்கி உள்ள மழைநீா் மற்றும் கடற்கரை பகுதியையும், முக்கரும்பூா் கிராமத்தில் விளைநிலங்களில் உள்ள மழைநீா் வடிகால் வாய்க்கால்களில் தண்ணீா் வடிவத்தையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். 

பொதுமக்கள் மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தில் இயங்கும் தொலைபேசி எண்:04364-222588 மற்றும் 1077 என்ற எண்ணை அழைத்து, மழை தொடா்பான புகாா்களை தெரிவிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தரங்கம்பாடி பேரூராட்சி தலைவா் சுகுண சங்கரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் ரவி, வட்டாட்சியா் மகேஷ், பேரூராட்சி செயல் அலுவலா் கமலக்கண்ணன்,பேரூராட்சி துணைத் தலைவா் பொன் ராஜேந்திரன், செம்பனாா்கோவில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மஞ்சுளா, மீனா ஆகியோா் உடனிருந்தனா்.