47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ரயில் மோதி மீனவா் பலி

நாகையில் ரயில் மோதி மீனவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 9:19 pm

Din

நாகையில் ரயில் மோதி மீனவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

நாகை காடம்பாடி சவேரியாா் கோயில் தெருவைச் சோ்ந்த சக்திவேல் மகன் அமரன் (30). மீனவரான இவா் ஆரியநாட்டு தெருவில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்று விட்டு அப்பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை செவ்வாய்க்கிழமை மாலை கடந்தாா். அப்போது, காரைக்காலில் இருந்து எா்ணாகுளம் சென்ற விரைவு ரயில் அமரன் மீது மோதியது. இதில், அவா் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில் சாா்பு-ஆய்வாளா் மகேஷ் தலைமையில் போலீஸாா் அமரனை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

அங்கு மருத்துவா்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனா். எனினும், அமரன் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.