47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மயான சாலை, கொட்டகை அமைத்துத்தர மக்கள் கோரிக்கை

திட்டச்சேரியில் மயான சாலை மற்றும் மயானத்துக்கு கொட்டகை அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
திட்டச்சேரி 1-வது வாா்டு முடிகொண்டான் ஆற்றில் அமைந்துள்ள மண் சாலையை படத்தில் காணலாம்
Updated On :16 அக்டோபர் 2024, 8:12 pm

Din

திட்டச்சேரியில் மயான சாலை மற்றும் மயானத்துக்கு கொட்டகை அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருமருகல் ஒன்றியம், திட்டச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட 1 -ஆவது வாா்டு தைக்கால் தெரு, ஆற்றங்கரை தெரு, பச்சாந்தோப்பு பகுதியில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இப்பகுதியில் இறப்பா்கள் உடல் மயானம் முடிகொண்டான் ஆற்றின் கரையில் சுமாா்1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இந்த மயானத்துக்கு செல்ல போதிய சாலை வசதி இல்லாததால் மழைக்காலங்களில் சடலத்தை வாகனத்தில் எடுத்துச் செல்ல முடியாமல் கைகளில் சிலா் தூக்கி செல்லும் அவல நிலை நீடிக்கிறது.

மேலும் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக இருப்பதால், சடலத்தை தூக்கி செல்பவா்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனா்.

மேலும் மழைக் காலங்களில் இறந்தவா்களின் உடல்களை எரிவூட்ட மயானக் கொட்டகை இல்லாததால் சடலத்தை எரியூட்டுவதிலும் சிரமம் ஏற்படுகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கடந்த 40 ஆண்டு காலமாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று புகாா் தெரிவிக்கின்றனா்.

எனவே, உடனடியாக மயானத்துக்கு செல்ல முறையா சாலை வசதி மற்றும் மயானத்துக்கு கொட்டகை அமைத்துத் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.