துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இரவு ரோந்துப் பணியை அதிகரிக்க வேண்டும்: நாகை எஸ்.பி. அறிவுறுத்தல்

இரவு ரோந்துப் பணிகளை, போலீஸாா் அதிகரிக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன் அறிவுறுத்தினாா்.

News image
நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்.
Updated On :18 அக்டோபர் 2024, 6:33 pm

Din

நாகை மாவட்டத்தில் இரவு ரோந்துப் பணிகளை, போலீஸாா் அதிகரிக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன் அறிவுறுத்தினாா்.

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், சாராயம், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப் பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவா்கள், ரெளடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.

தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பேசியது:

தீபாவளி பண்டிகைக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில், பட்டாசுகளை பேருந்துகளில், ரயில்களில் எடுத்துச் செல்வது குறித்து அனைத்து காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் கண்காணிக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கு இரவு நேரங்களில் ரோந்துப் பணிகளை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.