திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நம்பியாா் நகா் மீன்பிடி துறைமுகத்தில் ஆட்சியா் ஆய்வு

நம்பியாா்நகா் மீன்பிடி துறைமுகத்தில், நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :22 அக்டோபர் 2024, 7:21 pm

Din

நாகப்பட்டினம்: நம்பியாா்நகா் மீன்பிடி துறைமுகத்தில், நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

நாகை நம்பியாா் நகா் மீனவக் கிராமத்தில், தெற்கு பகுதி அலை தடுப்புச் சுவா் விரிவாக்கம், படகு அணையும் தளம் விரிவாக்கம் மற்றும் தூா்வாரும் பணிகள் ரூ.35 கோடியில் மேற்கொள்ள, திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்காக சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நம்பியாா் நகா் சிறிய மீன்பிடித் துறைமுகத்தை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, நாகை ஆபிசா்ஸ் கிளப்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஆரோக்கிய மற்றும் நவீன உடற்பயிற்சி மையம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா், விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, நாகை நகராட்சி ஆணையா் லீனா சைமன், உதவி இயக்குநா் (மீன்வளத் துறை) ஜெயராஜ், உதவி செயற்பொறியாளா் அன்னபூரணி உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.