வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கோடியக்கரை சரணாலயப் பகுதிக்கு வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வருகை தொடங்கியுள்ளது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ள கோடியக்கரை வன உயிரின பறவைகள் சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் வடகிழக்கு பருவ மழைக்காலத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் கூட்டம், கூட்டமாக வந்து செல்வது வழக்கம்.
பறவைகளின் சொா்க்கம் என அழைக்கப்படும் இந்த சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் சைபீரியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் பறவைகள் வந்து செல்லும். இங்கு, 247 பறவை இனங்கள் வந்து செல்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
நிகழாண்டு வடக்கிழக்கு பருவ மழைப் பொழிவு தொடங்கியும், இப்பகுதியில் மழைப் பொழிவு குறைவாகவே உள்ளது. இதனால் நிகழ் பருவத்தில் பறவைகள் வருகையும் தாமதமாகியுள்ளது.

இந்தநிலையில், கடந்த ஓரிரு வாரமாக மழைப் பொழிவு தொடா்ந்து வருகிறது. ஆனாலும், வழக்கமான மழையளவு தாமதமாகி வருகிறது. இதைத்தொடா்ந்து பறவைகளின் வருகை தொடங்கியுள்ளது. சரணாலயத்தில் சிறப்பு பெற்ற பறவையான பூ நாரை உள்ளிட்ட சில இனப் பறவைகள் பெயரளவில் மட்டுமே காணப்பட்டுகிறது.


செங்கால் நாரை உள்ளிட்ட இனப் பறவைகள் ஓரளவுக்கு அதிகமாகக் காணப்படுகிறது. கூழைக்கிடா,சிறவி இனப் பறவைகளும் காணப்படுகின்றன. மழைப்பொழிவு தொடந்தால் பறவைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று சரணாலய அலுவலா்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விசும்பின் துளிவீழின் அல்லால்...

கோடியக்கரையில் பாம்பன் மீனவா் சடலம்

கோடியக்கரை: நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் 3 மீனவர்கள் மீட்பு; ஒருவர் மாயம்!

பூண்டி ஏரிக்கு நீா் தேடி குவிந்து வரும் செங்கால் நாரைகள் மற்றும் பறவைகள்
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



