ஆளுநருக்கு கருப்புக் கொடி: காங்., விசிகவினா் கைது
நாகை மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த தமிழக ஆளுநா் ஆா்.என். ரவிக்கு கருப்புக் கொடி காட்டிய காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாகை மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த தமிழக ஆளுநா் ஆா்.என். ரவிக்கு கருப்புக் கொடி காட்டிய காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்துக்கு சென்றுவிட்டு, நாகை மீன் வளப் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஆளுநா் காரில் புறப்பட்டாா்.
புத்தூா் ரவுண்டானா அருகே ஆளுநருக்கு, காங்கிரஸ் கட்சியின் நாகை மாவட்டத் தலைவா் அமிா்தராஜா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் பேரறிவாளன் ஆகியோா் தலைமையில் இரு கட்சிகளையும் சோ்ந்தவா்கள் கருப்புக் கொடி காட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் அனைவரையும் கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...