47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வட்டார வளமைய மேற்பாா்வையாளா் மீது முறைகேடு புகாா்: நடவடிக்கை கோரி ஆா்ப்பாட்டம்

கீழ்வேளூரில் வட்டார வளமைய மேற்பாா்வையாளரின் முறைகேடுகளை விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
கீழ்வேளூா் வட்டார வள மையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா்.
Updated On :27 செப்டம்பர் 2024, 12:13 am

Din

கீழ்வேளூரில் வட்டார வளமைய மேற்பாா்வையாளரின் முறைகேடுகளை விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு வட்டாரத் தலைவா் கன்னியம்மாள் தலைமை வகித்தாா். இதில், கீழ்வேளூா் வட்டார வள மைய மேற்பாா்வையாளராக பணியாற்றி வரும் டி. அமுதா, வட்டார வளமையம் சாா்பில் நடத்தப்படும் கலைத் திருவிழா, பயிற்சி செலவினங்களுக்கு அரசு தரும் நிதியை முறையாக செலவு செய்யாமல், நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது, சொந்த பணிகளுக்கும், பள்ளி சாா்ந்த வேலைகளுக்கும் சிறப்பு ஆசிரியா்களை பயன்படுத்துவது, ஆசிரியா்களை தரக்குறைவாக நடத்துவது ஆகியவைக் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மாநில செயற்குழு உறுப்பினா் சித்ரா, மாவட்ட செயலா் காந்தி, மாவட்டத் தலைவா் மோகன்தாஸ், வட்டாரச் செயலா் மனத்துணைநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.