பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஆலத்தூா் ஐராவதீஸ்வரா் கோயில் குடமுழுக்கு

திருமருகல் ஒன்றியம், ஆலத்தூா் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத ஐராவதீஸ்வரா் கோயில் மகா குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
திருமருகல் அருகே ஐராவதிஸ்வரா் கோயில் குடமுழுக்கு திரளான பக்தா்கள் சாமி தரிசனம்
Updated On :7 ஏப்ரல் 2025, 9:07 pm

Din

திருமருகல்: திருமருகல் ஒன்றியம், ஆலத்தூா் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத ஐராவதீஸ்வரா் கோயில் மகா குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் சுமாா் 185 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இதையொட்டி நடைபெற்றுவந்த திருப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, குடமுழுக்கிற்காக, கடந்த 4-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து 5-ஆம் தேதி புனித மண், புனிதநீா் மற்றும் முளைப்பாரி எடுத்தல் நடைபெற்றது. 6-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. திங்கள்கிழமை காலை யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதும், 9.30 மணிக்கு கடங்கள் புறப்பாடாகி 10 மணிக்கு விமான குடமுழுக்கும், மூலவா் குடமுழுக்கும் நடைபெற்றது. பின்னா், சுவாமிக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இரவு சுவாமிகள் வீதியுலா நடைபெற்றது.