காரைக்கால்-தஞ்சை பயணிகள் ரயில் பகுதியாக ரத்து

காரைக்கால்-தஞ்சை பயணிகள் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

நாகப்பட்டினம்: காரைக்கால்-தஞ்சை பயணிகள் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூா்-நாகை இடையேயான ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதையடுத்து, காரைக்காலில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்படும் காரைக்கால்-தஞ்சை பயணிகள் ரயில் காரைக்கால்-திருவாரூா் இடையே டிச.21, 24, 26, 28, 31 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இந்த தேதிகளில் காரைக்கால்-தஞ்சை ரயில் திருவாரூரில் இருந்து வழக்கமான நேரத்தில் புறப்படும். காரைக்கால், நாகூா், நாகப்பட்டினம், கீழ்வேளூா் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சோ்ந்த ரயில் பயணிகள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com