காரைக்கால் - தஞ்சை இடையே திருச்சி பயணிகள் ரயில் ரத்து!
திருச்சி ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே திருச்சிக் கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி கோட்டத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, காரைக்கால்-திருச்சி-காரைக்கால் பயணிகள் ரயில்கள் (76819 -76820) ஜன.22, 24, 27, 29 ஆகிய தேதிகளில் தஞ்சை-காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பகுதியாக ரத்து செய்யப்பட்ட நாள்களில் காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில் தஞ்சையிலிருந்து அதன் வழக்கமான நேரத்தில் மாலை 17.32 புறப்படும்.
ஜன 22, 24, 29, 31 ஆகிய தேதிகளில் 13.00 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்படும் காரைக்கால்-தஞ்சாவூா் பயணிகள் ரயில் (56817), வழியில் ஒரு பொருத்தமான இடத்தில் 60 நிமிடங்களும், ஜன.27-ஆம் தேதி 75 நிமிடங்களும் நின்று செல்லும் என தெரிவித்துள்ளாா்.
