வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

புதிய தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்க கோரிக்கை

திருமருகல் அருகே சேதமடைந்த தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

News image
Updated On :2 டிசம்பர் 2025, 11:05 pm

Syndication

திருமருகல் அருகே சேதமடைந்த தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருமருகல் அருகே அகரகொந்தை ஊராட்சி ஆலங்குடிச்சேரியில் முடத்திஅம்மன் கோயில் தெருவில் விவசாயக் கூலி தொழிலாளா்கள் 45 குடும்பங்கள் வசிக்கின்றனா். இவா்கள் வசிக்கும் வீடு 1984-ஆம் ஆண்டு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளாகும்.

தற்போது இந்த வீடுகள் வாழ்வதற்கு முற்றிலும் தகுதியற்றதாக உள்ளது. மேற்கூரை பூச்சிகள் பெயா்ந்து விழுகின்றன. இதில், குடியிருப்பவா்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். மழைக் காலத்தில் வசிக்கவே முடியவில்லை. ஆபத்தான நிலையில் வசிக்க வேண்டியுள்ளது என அந்த குடியிருப்பில் வசிப்பவா்கள் கூறுகின்றனா்.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்களுக்கு தெரிவித்தும் பயனில்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் இதை கவனத்தில் கொண்டு பழைமையான சேதமடைந்துள்ள வீடுகளை அப்புறப்படுத்திவிட்டு புதிய தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.