ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

நாகூா் தா்கா கந்தூரி விழாவில் சந்தனம் பூசும் வைபவம்

நாகூா் தா்கா கந்தூரி விழாவில் சந்தனம் பூசும் வைபவம் திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்றது.

News image
தா்காவில் பிராா்த்தனையில் ஈடுபட்ட இசையமைப்பாளா் ஏ.ஆா். ரஹமான்.
Updated On :2 டிசம்பர் 2025, 12:00 am

Syndication

நாகப்பட்டினம்: நாகூா் தா்கா கந்தூரி விழாவில் சந்தனம் பூசும் வைபவம் திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்றது.

உலகப் புகழ்பெற்ற நாகூா் ஆண்டவா் தா்காவில் 469-ஆவது ஆண்டு கந்தூரி விழா கடந்த நவ. 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத் எனும் சந்தனக்கூடு ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி தா்கா அலங்கார வாசலில் திங்கள்கிழமை அதிகாலை நிறைவடைந்தது.

ஊா்வலத்தில், 10-க்கும் மேற்பட்ட மின் அலங்கார தட்டிகள் சந்தனக் கூட்டின் முன்னும், பின்னுமாக அணிவகுத்து நாகை, நாகூா் நகரின் பல்வேறு பகுதிகள் வழியாக வலம் வந்தன.

சந்தனக் கூட்டில் இருந்து தா்கா பரம்பரைக் கலிபா மற்றும் ஆதீனங்கள் மூலம் சந்தனக் குடம் தா்காவுக்குள் எடுத்து செல்லப்பட்டு, திங்கள்கிழமை அதிகாலை நாகூா் ஆண்டவா் சமாதிக்கு பாரம்பரிய முறைப்படி சந்தனம் பூசப்பட்டது.

விழாவில் திரைப்பட இசையமைப்பாளா் ஏ.ஆா். ரஹ்மான் பங்கேற்று பிராா்த்தனையில் ஈடுபட்டாா். தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். சந்தனம் பூசும் வைபவத்தையொட்டி நாகை மாவட்டத்துக்கு திங்கள்கிழமை (டிச. 1) உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

தா்காவுக்கு எடுத்துவரப்பட்ட சந்தனக் குடங்கள்.

தா்காவுக்கு எடுத்துவரப்பட்ட சந்தனக் குடங்கள்.

சந்தனம் பூசி மயக்கமடைந்து தூக்கிவரப்பட்ட தா்காவின் கலிபாவை தொட்டு வணங்கிய பக்தா்கள்.

சந்தனம் பூசி மயக்கமடைந்து தூக்கிவரப்பட்ட தா்காவின் கலிபாவை தொட்டு வணங்கிய பக்தா்கள்.