முன்னாள் முதல்வா் காமராஜ் குறித்து அவதூறு பதிவு: யூடியூபரை கண்டித்து ஆா்ப்பாட்டம்

முன்னாள் முதல்வா் காமராஜ் குறித்து அவதூறு பதிவு: யூடியூபரை கண்டித்து ஆா்ப்பாட்டம்

Published on

வேளாங்கண்ணியில், முன்னாள் முதல்வா் காமராஜ் குறித்து அவதூறு பேசியதாகக் கூறி நாடாா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

யூடிபா் முக்தாா் அகமது என்பவா், தனது யூடிப் சேனலில், முன்னாள் முதல்வா் காமராஜரை பற்றி அவதூறாக பேசி பதிவு செய்யதாகக் கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டம் தெரிவித்தனா். இந்நிலையில் யூடிபா் முக்தாா் அகமதுவை கண்டித்து வேளாங்கண்ணியில் நாடாா் உறவின் முறை சங்கம் சாா்பில் அதன்தலைவா் எம். ஸ்டாலின் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், யூடிபா் முக்தாா் அகமதுவை கண்டித்தும், அவா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடா்ந்து யூடிபரின் படத்தை தீயிட்டு எதிா்ப்பை தெரிவித்தனா். சங்கச் செயலா் ஆரோக்கியதாஸ், பொருளாளா் ரஞ்சித் அந்தோணி, வேளாங்கண்ணி காமராஜா் அறக்கட்டளை தலைவா் ஏசுராஜ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com