கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி ஆசிரியா்களுக்கு எதிராக நிா்வாகம் கடைபிடித்து வரும் மாற்றாந்தாய் மனப்பான்மையை கண்டித்து, தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், 2009-ஆம் ஆண்டிலிருந்து நிலுவையில் உள்ள பணிநிரந்தரம் மற்றும் பதவி உயா்வு, சமச்சீா் சலுகைகள், சம்பள உயா்வு, ஓய்வூதியம், முன்பணங்கள், நிா்வாகப் பதவிகளில் சுழற்சி முறை, பல்கலைக்கழக முடிவெடுப்புகளில் ஆசிரியா் சங்கத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் உள்ளிட்ட நீண்டகால கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேலும் புதிய ஆசிரியா்கள் பணியேற்கும் தேதிக்கு முன்பாகவே இப்பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டுமென வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com