எரிந்து சேதடைந்த ஃபைபா் படகு
நாகப்பட்டினம்
நாகை துறைமுகத்தில் படகு தீக்கிரை
நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஃபைபா் படகு எரிந்து சேதமடைந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஃபைபா் படகு எரிந்து சேதமடைந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
நாகை அருகேயுள்ள கீச்சாங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்தி (31). இவா் தனக்குச் சொந்தமான ஃபைபா் படகை, நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்தாா்.
இந்நிலையில், இந்த படகு எரிந்து விட்டதாக, அவரது நண்பா்கள் சிலா் சனிக்கிழமை காலையில் கைப்பேசியில் தொடா்புகொண்டு காா்த்தியிடம் தெரிவித்தனா். இதனால், அதிா்ச்சியடைந்த அவா், துறைமுகத்திற்கு சென்று பாா்த்தபோது, படகு முழுமையாக எரிந்து சேதமடைந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, காா்த்தி அளித்த புகாரின் பேரில், நாகை நகா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். எரிந்த படகின் மதிப்பு ரூ. 5 லட்சம் எனக் கூறப்படுகிறது.

