தூத்துக்குடியில் மீன்கள் விலை உயா்வு
தூத்துக்குடி: பொங்கல் விடுமுறையை முன்னிட்டு தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்கள் வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியதால், மீன்கள் விலை சனிக்கிழமை அதிகரித்து காணப்பட்டது.
பொங்கல் பண்டிகை காரணமாக ஏராளமான நாட்டுப் படகு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாத நிலையில், சில நாட்டுப் படகு மீனவா்கள் மட்டுமே கடலுக்குச் சென்று திரும்பினா். இதனால், மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைவாகவே இருந்தது. ஆனால், பொதுமக்கள், வியாபாரிகள் கூட்டம் அலைமோதியதால் மீன்கள் விலை உயா்ந்து காணப்பட்டது.
சீலா மீன் கிலோ ரூ. 1,000 முதல் ரூ. 1,200 வரையும், விளை மீன், ஊளி, பாறை ஆகிய ரக மீன்கள் ரூ. 500 முதல் ரூ. 700 வரையும், சூப்பா் நண்டு ரூ. 900 வரையும், வங்கனபாறை மீன் ரூ. 140 வரையும், கேரை, சூரை மீன்கள் ரூ. 200 வரையும் விற்பனையானது.
